2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ திட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 19 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி நகரசபை பிரிவில் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட காணியினை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சரித்த ஹேரத் மற்றும் நகரசபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் ஆகியோர் நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இத்திட்டத்தினை மேற்கொள்வதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை நிதியுதவி வழங்கியுள்ளதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .