2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

வடகிழக்கு தமிழர் பிரதேசத்துக்கு அபிவிருத்தி என்பது எட்டாக்கனியே: இரா.பிரபாகரன்

Menaka Mookandi   / 2012 ஜூன் 19 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


இந்நாட்டில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்ற போதும் தமிழர்கள் செறிந்துவாழும் வடகிழக்குப் பிரதேசம் அபிவிருத்தி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. இதற்கு தழிழ் மக்கள் மத்தியில் ஒரு முறையான தலைமைத்துவம் இன்மையே காரணம் என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்து அக்கிராம மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாணத்தில் மட்டும் கணவரை இழந்த பெண்கள் 59,712 பேர் உள்ளனர். இதில் இளம் பெண்கள் அதிகம் உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற நிதிகள் மக்கள் மத்தியில் முறையாகச் சென்றடைவதில்லை.

இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக உற்று நோக்கும்போது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தரமான திறமையான தலைவர் இதுவரை காணப்படாத நிலையே உள்ளது. இதனை தற்போது மக்கள் உணர்ந்துள்ளனர்.

எமது ஈரோஸ் அமைப்பு வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலும் பல அபிவிருத்திப் பணிகளையும் புனருத்தாரண வேலைகளையும் மேற்கெண்டு வருகின்றது. நான் வெளிநாடுகளில் உதவி பெற்று அந்த நிதியினைக் கொண்டு இங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவி வருகின்றேன்.
 
அதன் அடிப்படையில் எமது அமைப்பின் மூலம் 650 பல்கலைக்கழக மாணவர்களின் கற்றலுக்கு உதவி வருகின்றோம், 198 பாலர் பாடசாலைகளுக்கும் ஏனைய விளையாட்டுக் கழகங்கள் மற்றும் விதவைகளுக்கும் உதவி வருகின்றோம்.

இந்த களுமுந்தன்வெளிக்கிராம மக்களுக்கு 50 கல்வீடுகளையும்,50 மலசலகூடங்களையும் 5, பொதுக் கிணறுகளையும் நான் அமைத்து தருவேன் எனவும் மக்கள்மத்தியில் உறுதி கூறுகின்றேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .