2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

தமிழ்மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த பொலிஸாரின் நிறைவு நாள் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 20 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்,எம்.சுக்ரி,ஜிப்ரான்)


மட்டக்களப்பு, கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்மொழிப் பயிற்சிநெறியை பூர்த்தி செய்த 92 பொலிஸாரின் பயிற்சிநெறி நிறைவுநாள் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் அக்கல்லூரியின் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.ஏ.சார்ள்ஸ், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.சமரகோன், மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி லெப்.கேணல் சுதத்த திலகரட்ண உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டனர்.

ஆசியமன்றத்தின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இப்பயிற்சிநெறியில்; 4ஆம் கட்டமாக தமிழ்மொழிப் பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்த பொலிஸார் இன்று வெளியாகினர்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .