2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்கான நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஜூலை 23 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடி உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி
நடவடிக்கைகளுக்கு எதிராக கடற்றொழில் அமைச்சின் அனுசரணையுடன் மாவட்ட கடற்றொழில் திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மீன்பிடி கூட்டுறவுச்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் அதிகாரிகளுக்கான செயலமர்வு நடைபெற்றது.

மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பூநொச்சிமுனை, கிரான்குளம், தேத்தாத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய கிராமமட்ட மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் அதிகாரிகள், மீனவர்கள் கலந்துகொண்டனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் உள்ளிட்ட  நிவாரணங்கள் வழங்காதுவிட இச்செயலமர்வில் தீர்மானிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .