2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலாப்பயணியின் கைப்பை பறிமுதல்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 27 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி,லோஹித்)

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி கடற்கரையை அண்டிய பகுதியில்  வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவரின் கைப்பை நேற்று வியாழக்கிழமை மாலை இனந்தெரியாதோரினால் பறிக்கப்பட்டுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நெதர்லாந்து நாட்டைச்  சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான கணவன், மனைவி ஆகிய இருவரும் கடற்கரையிலிருந்து அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் இவர்களின் கைப்பையை பறித்துக்கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கைப்பையினுள் 700 யூரோ நாட்டு நாணயம் மற்றும் இலங்கைப் பணம் 60 ஆயிரம் ரூபா,  இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 

இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .