2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

செட்டிப்பாளையத்தில் பொலிஸ் நடமாடும்சேவை

Kogilavani   / 2012 ஜூலை 28 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் இன்று காலை பொலிஸ் நடமாடும் சேவை ஒன்று நடைபெற்றது.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற, இந் நடமாடும்சேவையில்,  பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே, களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகரி டாக்டர் எஸ்.ராஜேந்திரன், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் சுகுணன், கல்லாறு வைத்தியசாலை வைத்தியர் மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செட்டிபாளையம் மக்களின் நலன் கருதி பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் நடமாடும் சேவையில் வைத்தியமுகாம், பொலிஸ் பதிவுகள், அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கள் தொலைந்தமை தொடர்பிலான பொலிஸ் முறைப்பாடுகள் என்பன வழங்கப்பட்டன.

பொலிஸ் மற்றும் பொது மக்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இவ் நடமாடும் சேவையில், மாணவர்களுக்கிடையிலான கட்டுரைப்போட்டி பொலிஸ் சேவையும் மக்களும் என்ற தலைப்பில் நடைபெற்றது. அத்துடன் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் எனபலரும் இவ் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பொது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வைத்தனர்.

இதன்போது மட்டக்களப்பு லயன் கிளப் மூலமாக இலவசமாக கண்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மூக்குக் கண்ணாடிகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .