2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

புனித றமழானுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 30 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் புனித றமழானுக்கான உலர் உணவு பொருட்கள் விநியோகமும் விசேட தேவையுடையோருக்கான சைக்கிள்களும் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் பரீட் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலமாக்கள், முக்கியஸ்த்தர்கள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது புனித றமழானுக்கான உலர் உணவு பொருட்கள் நூற்றுக்கு மேற்பட்ட  குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதுன் விசேட தேவையுடையோருக்கான சைக்கிள்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .