2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

அறுபது இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட வீதி திறப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

அறுபது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட காத்தான்குடி பரீனாஸ் குறுக்கு வீதி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் நிதியொதுக்கீட்டில் கீழ் இவ்வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.

இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் எம்.எப்.எம்.சிப்லி உட்பட முன்னாள் நகர சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.சலீம், பிரமுகர் எம்.ஏ.எம்.அமீர் அலி உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அப்பகுதி பொதுமக்களையும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா சந்தித்து கலந்துரையாடினார் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .