2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்களை வரவேற்கும் மற்றும் வழியனுப்பும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, லோஹித்)

மட்டக்களப்பு மறை மாவட்ட புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பொன்னைய்யா ஜோசப்பை வரவேற்கும் மற்றும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயராக கடமையாற்றி திருமலை மறை மாவட்டத்திற்கு ஆயராக கடமையாற்ற செல்லும் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளையை வழியனுப்பும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில், பேரவையின் மாவட்ட கிளையின் தலைவர் எம்.கணேசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  பேரவையின் பிரதி தலைவர்களான மட்டக்களப்பு இராமகிருஷன மிஷன் தலைவர் சுவாமி கபாலிஜி, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் உட்பட அனைத்து மத பிரமுகர்கள், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மறைமவாட்ட ஆயராக கடமையாற்றிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளையை அவரது ஆயர் இல்லத்திலிருந்து பிரமுகர்கள் மலர் மாலை அணிவித்து ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன்

அவரது சேவையை கௌரவிக்குமுகமாக அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .