2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு வார இதழின் விற்பனை பிரதிநிதிக்கு அச்சுறுத்தல்

Super User   / 2012 நவம்பர் 27 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

பிரதி திங்கட்கிழமை தோறும் வெளிவருகின்ற 'கிழக்கு' வார இதழின் விற்பனை பிரதிநிதி நேற்று திங்கட்கிழமை மாலை அச்சுறுத்தப்பட்டதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி, டெலிகொம் சந்தியில் 'கிழக்கு' பத்திரிகையை விற்பனை செய்துகொண்டிருந்த போதே அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது சுமார் 48 பிரதிகள் பலவந்தமாக  பறித்தெடுத்து செல்லப்பட்டதாகவும் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்தம் டெலிகொம் சந்தியில் நின்றுகொண்டிருந்த மூன்று நபர்களே இந்தப் பத்திரிகை காத்தான்குடி பிரதேசத்தில் விற்கக் கூடாது என அச்சுறுத்தியதாகவும் நிறுவன அடையாள அட்டையையும் பறித்து அதன் பிரதியை எடுத்துக்கொண்டதாகவும் குறித்த விற்பனைப் பிரதிநிதியான ஏ.எஸ்.எம்.நிஜாம் முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .