2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 28 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர், அமெரிக்காவில் உள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும் விதவைகளுக்கும் வறியவர்களுக்குமான அமைப்பின் நிதி உதவியில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாகரை இறாலோடை வள்ளுவர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது.

வாகரை இறாலோடை வள்ளுவர் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு இந்து ஒன்றிய செயலாளர் கதிர்பாரதிதாசன், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் 69 மாணவர்களுக்கு 43,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .