2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுவின் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம்

Kogilavani   / 2012 நவம்பர் 28 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

வவுணதீவுப் பொலிஸ் பிரிவின் சிவில் பாதுகாப்பு செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை வவுணதீவுப் பரமேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுணதீவுப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஐ.உவைஸின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த சமரக்கோண் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வவுணதீவுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 16 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த கிராமிய சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிவில் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகள் நடவடிக்கைகள் குறித்து மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்தின தெளிவுபடுத்தியதுடன் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுக்கவும் கிராம மக்களால் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

வவுணதீவுப் பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத ஆற்றுமண் அகழ்தல், சாளம்பைக்கேணியில் அமைந்துள்ள மதுபான களஞ்சியத்தில் சில்லறையில் மதுபானம் விற்பதை தடுப்பதுடன் அனுமதிப் பத்திரத்தை இரத்துச்செய்தல், கிராமங்களில் சட்டவிரோதமாக இடம்பெறும் மதுபான விற்பனையினைத் தடுத்தல், பிரதேசத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தல், வீதிகளைத் திருத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதற்கான நடவடிக்கைகளை பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுவூடாகவும் மாவட்ட பாதுகாப்பு குழுவூடாகவும் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .