2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

கொக்கட்டிச்சோலையில் போலி வைத்தியர் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலைப் பகுதியில் போலி வைத்தியராக நடமாடிய ஒருவரை அப்பகுதியிலுள்ள விசேட அதிரடிப்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்து கொக்கட்டிச் சோலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மட்டக்களப்பை சேர்ந்த அரசரெட்ணம்போல் அஜித் குமார் (28 வயது)  என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் கொக்கட்டிச் சோலைப் பகுதியில் தான் வைத்தியராக கடமையாற்றுவதாக கூறி விசேட வைத்திய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த போதே, இவரின் செயற்பாடுகளில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் இதுகுறித்து அதிரடிப் படையினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அதன் பின்னரே இவர் விசேட அதிரடிப்படையினால் கைது செய்து  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .