2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைப்பது தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைப்பது தொடர்பான செயலமர்வொன்று காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் றபாஸ், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் எம்.பிரபா, காத்தான்குடி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் எம்.கோமலேஸ்வரன், பிரதேச சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பி.குணரட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைப்பதற்காக நாடளாவிய ரீதியில் சிறுவர் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைப்பதற்கான செயற்றிட்டத்தின் கீழ் இச்செயலமர்வு நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .