2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

2013இல் நெல் உற்பத்தி அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 200ஆ8ம் ஆண்டு 59,227 மெற்றிக்தொன்; நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2103ஆம் ஆண்டில் 99,750 மெற்றிக்தொன்னாக அதிகரித்துள்ளதென மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

2008 இல் சராசரியாக ஒரு ஹெக்டெயருக்கு 3.9 சதவீதமாக மெற்றிக்தொன் உற்பத்திசெய்யப்பட்ட நெல், 2013 இல்; 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தேசிய நெல் உற்பத்திக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து  2008 இல் 3 சதவீதம் பங்களிப்புச் செய்யப்பட்டது. இது 2013 இல்; 12 சதவீதமாக அதிகரித்துள்ளதெனவும் அவர் கூறினார்.

விவசாய உள்ளீடுகளை அரசாங்கம் மானியமாக வழங்கியமை,  விதைநெல், இலவச பசளை விநியோகம், காசுக்கான வேலைத்திட்டத்தின் மூலம்  வயல் நிலங்களை சமப்படுத்துதல் செய்தமை, விவசாய விரிவாக்கல் சேவை அதிகரித்தமை, புதிய தொழில்நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டமை, நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைக்கப்;பட்டமை. 8 நெற்களஞ்சியசாலைகள் தலா 20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டமை, கரடியனாறு விவசாயப்பண்ணை புனரமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்தமை  போன்ற காரணங்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X