2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

காந்தி சிலையை அகற்ற நடவடிக்கை: மட்டு மேயர்

Super User   / 2013 ஜனவரி 24 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தியின் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு. மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார்.

நகரின் அபிவிருத்திக்காவே குறித்த காந்தி சிலையை  அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள பகுதியும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதனாலேயே குறித்த சிலையை அகற்ற தீர்மானித்துள்ளோம்" என அவர் குறிப்பிட்டார்.

இதற்காக தற்போதுள்ள காந்தியின் உருவச்சிலையை அவ்விடத்திலிருந்து அகற்றி அபிவிருத்தி வேலைகள் முடிவடைந்தவுடன் அந்த சிலையானது தற்போதுள்ள இடத்திற்கு முன்பாக நிறுவப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .