2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பாதைகள் பழுதடைவதாக கூறி பயணிகள் பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலுள்ள மண்முனைத்துறை வாவியினுடாக பாதையில் பயணிக்கும் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை பகிஷ்கரிப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.

இந்த வாவியில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபட்டு வரும் இரண்டு பாதைகள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன.

இதனால், மட்டக்களப்பிலிருந்து கொக்கட்டிச்சோலை மற்றும் பட்டிப்பளை பிரதேசங்களுக்கு செல்லும் அரசாங்க ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சேவையில் ஈம். மற்ற படகின் இயந்திரம் 20 வலுசக்தியுடையதுமாகும்.

இதை சமமாக 40வலு சக்தியுடைய இயந்திரங்களை பொருத்துமாறு பல தடவைகள் பயணிகள் கூறியும் இது உரிய ஒப்பந்த காரரினால் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பும் இந்த பாதை(படகு) பயணிகளை ஏற்றிக்கொண்டு வாவியில் பயணிக்கும் போது பழுதடைந்ததால் 4மணி நேரம் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

இவைகளை கருத்திற் கொண்டு இன்று காலை இதில் பயணிக்கும் மக்கள் பகஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு விரைந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கேட்டதுடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்த காரருடன் கலந்துரையாடி இந்த படகின் இயந்திரங்களை மாற்றி சேவையில் ஈடுபடுத்துமாறும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கிடையில் இதை சரி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து பொதுமக்களின் பகிஷ்கரிப்பு நடவடிக்கை முடிக்கு வந்தது.


  Comments - 0

  • Thayayuthan Saturday, 23 February 2013 02:05 AM

    யார் என்ன சொன்னாலும் பாதை ஒப்பந்தம் எடுத்தவனும் பாதை ஒப்பந்தம் கொடுத்தவனும் அதை புரிந்துக‌னும். நிரந்தரம் பயணித்தால் அனைவருக்கும் புரியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .