2026 மே 06, புதன்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 மார்ச் 29 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை வெம்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுவரும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
 
இங்கு கல்வி கற்கும் வறிய மாணவர்கள் ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் 66 மாணவர்களுக்கு அறுபத்தாராயிரம் ரூபாய் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள், பேனை, பென்சில், அழிறப்பர், தண்ணீர் போத்தல், கலர்பெட்டி, புத்தகப்பை என்பன வழங்கப்பட்டன.
 
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் இக்கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வெம்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள்;, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் உறுப்பினர்களான சொ.ரதன், இ.தேவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .