2026 மே 06, புதன்கிழமை

சின்னவத்தைக் கிராமத்தின் பிரதான வீதி புனரமைப்பு செய்யப்படாததினால் மக்கள் சிரமம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வ.சக்திவேல்


மட்டக்களப்பு, போரதீவுப் பிரதேத்திற்குட்பட்ட சின்னவத்தைக் கிராமத்தின் பிரதான வீதி இதுவரை புனரமைப்புச் செய்யப்படாமலிருப்பதனால் இக்கிராமத்து மக்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில் இவ்வீதியின் புனரமைப்புப்பற்றி யாரும் கவனிப்பாரற்றுக் கிடப்பதனால் கிராமத்து மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பித்துள்ளதனால் உடன் இவ்வீதியினை சம்மந்தப்பட்டவர்கள் புனரமைப்புச் செய்துதருமாறு
இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இவ்வீதி கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சேதமைடந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .