2026 மே 06, புதன்கிழமை

புதுக்குடியிருப்பில் பெண் சுய தொழில் உற்பத்தியாளர் நிலையம் திறப்பு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 25 இலட்சம் ரூபாய் நிதியில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நிர்மாணிக்கப்பட்ட பெண் சுய முயற்சியாளர் நிலையம் நேற்றுமுன்தினம் மாலை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே.அபேகுணவர்த்தனவினால் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கிராம அதிபிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மாதர் அபிவிருத்தி சங்கத்திற்கான இந்நிலையத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பிரம்பு மற்றும் பல் வேறு வகையான கைப்பணிப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜா தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் எம்.மகேந்திரராஜா யு.என்.டி.பி. ஆலோசகர் என்.புவனேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .