2026 மே 06, புதன்கிழமை

அடையாள அணிவகுப்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் தப்பியோட்டம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 26 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அடையாள அணி வகுப்புக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கைதி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஏறாவூரில் வைத்து தப்பிச் சென்றுள்ளார். பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இக்கைதிக்கு நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதற்கமைய இக்கைதிக்கான அடையாள அணிவகுப்பொன்று இன்று ஏறாவூர் சுற்றுலா நீதி மன்றத்தில் இடம்பெற ஏற்பாடாயிருந்தது. இதன் பிரகாரம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியை இன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்திற்கு கொண்டுவந்து சிறைச்சாலை பஸ் வண்டியில் இவரை கொண்டு வந்து சுற்றுலா நீதிமன்றத்திற்கு அருகில் நின்றவேளையில் இக்கைதி தப்பிச் சென்றுள்ளார்.

கைதி தப்பிச் சென்றுள்ள சம்பவத்தினை தொடர்ந்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பயனளிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .