2026 மே 06, புதன்கிழமை

மின் கட்டண அதிகரிப்பிற்காக மானியம் வழங்குமாறு மாகாண சபையில் பிரேரணை

Super User   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மின் கட்டண அதிகரிப்பால் அல்லலுறும் மக்களுக்கு மானியம் வழங்க மத்திய அரசாங்கம் அல்லது  கிழக்கு மாகாண சபை  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ளது.

இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கவுள்ளார்.

மின் கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தே தான் இந்த பிரேரணைணை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவால் மின் கட்டண அதிகரிப்பு குறித்து மக்களிடம் கருதுக் கணிப்பை மேற்கொண்டு கடந்த 20.04.2013 தொடக்கம் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

எமது நாட்டின் 94 வீதமானோர் மின்சாரம் பாவிக்கின்றனர் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.  இந்த வருட இறுதிக்குள் 600 மெகா வோட்ஸ்  மின்சாரம் இணைக்கப்படுமெனவும் இக்கட்டணங்கள்  எதிர்வரும் ஜனவரி மாதம்  குறைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை  பாவிப்போரை பொறுத்த மட்டில், 30 அலகு பயன்படுத்துவோருக்கு 75 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது. 11 இலட்சம் குடும்பங்கள் 30 அலகு வரையில் பயன்படுத்துகின்றார்கள், 60 அலகு பயன்படுத்துவோர் 16 இலட்சம் குடும்பங்கள். 90 அலகுக்கு மேல் பயன்படுத்துவோர் ஐந்து இலட்சத்து 60 ஆயிரம் குடும்பங்களாகும். இக்குடும்பங்களை மின்கட்டண உயர்வு அதிகமாக  பாதிக்கும்.

இதனால் கிழக்கு மாகாணத்திலும், ஏனைய பகுதிகளிலும் பொதுமக்கள் பலவழிகளிலும் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் பாதிக்கப்படும் மத்திய அரசின் தீர்மானத்தை கண்டிப்பதோடும் இப்பாதிப்பிலிருந்து மக்கள் மீளவேண்டுமாயின் உடனடியாக மின்கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்.

இல்லாத பட்சத்தில் மக்களைப் பாதிப்பிலிருந்து  மீட்பதற்கு ஏதாவதொரு சலுகை, மானியக்கொடுப்பனவை மத்திய அரசு அல்லது மாகாணசபை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் தீர்மானத்தை சபையில் பிரேரணையாகக் கொண்டுசெல்லவுள்ளேன்" என்றார்.

  Comments - 0

  • vallarasu Sunday, 28 April 2013 03:25 PM

    சிகரெட்டின் விலை அதிகரிக்கும்போது ஆதரவு வழங்குகீறீர்கள், மின் கட்டணத்தைக் கூட்டினால் எதிர்க்கிறீர்கள். இதை நான் சொல்லவிலை நம்ம நாட்டு///?//////////சொல்கிறார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .