2026 மே 06, புதன்கிழமை

அல்குர்ஆன் பிரதிகள் வழங்கல்

Super User   / 2013 மே 02 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியில் 500 மாணவர்களுக்கு இலவசமாக அல்குர்ஆன் பிரதிகள் நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டன. காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் அதன் மாநாட்டு மண்டபத்தில் வைத்து இந்த குர்ஆன் வழங்கப்பட்டன.

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும் தென் கிழக்கு பலக்லைக்கழக அரபு இஸ்லாமிய கற்கைகளுக்கான பீடாதிபதியுமான மௌலவி ஏ.எம்.அலியார் றியாதி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடியிலும் அதனை சுற்றியுள்ள ஏனைய கிராமங்களிலுமுள்ள குர்ஆன் மதரசாக்களிலுள்ள 500 மாணவர்களுக்கு இந்த அல்குர்ஆன் பிரதிகள் இலவசாமாக வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .