2026 மே 06, புதன்கிழமை

வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக எம்.ஐ.எம்.றிஸ்வி நியமனம்

A.P.Mathan   / 2013 மே 05 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக எம்.ஐ.எம்.றிஸ்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமையாற்றி வந்த ஏ.எம்.எம்.றியாழ் - நீதிச் சேவை ஆணைக் குழுவின் வருடாந்த இடமாற்றத்தின் ஊடாக இடமாற்றம் பெற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட இவர், பதில் கடமைகளின் நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் கடமையாற்றிவந்த நீதிபதி த.கருணாகரன் சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஐ.எம்.றிஸ்வி - கல்முனை நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமையாற்றியவராவார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .