2026 மே 06, புதன்கிழமை

குடிநீர் இணைப்பை பெறுவதற்கான உதவிப் பணம் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 மே 13 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 300 தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கல்  வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் குடிநீர் இணைப்பை பெறுவதற்கான உதவிப் பணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் மனித வள அபிவிருத்திக்கான சர்வதேச ஒன்றியத்தின் அனுசரணையுடன் ஹிறா புவண்டேசனினால் இந்த உதவிப்பணம் வழங்கி வைக்கப்பட்டது.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .