2026 மே 09, சனிக்கிழமை

dd

இந்து ஆலயங்களைப் பாதுகாப்போம்; மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


'இந்துக் கோயில்களை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளின் கீழ் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு, அரசடி வைத்தியசாலை சந்தியில் இடம்பெற்றது.

உலகளாவிய ரீதியில் உள்ள இந்து ஆலயங்களையும் மற்றும் இந்துக்களையும் பாதுகாக்கும் அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக் கிளையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எஸ்.சுதர்சனன் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில், மாவட்டத்திலுள்ள பல இந்து அமைப்புக்கள் பங்குபற்றின.

அண்மையில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள சில இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது விடயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் மகஜர் ஒன்று அரச அதிபரிடம் கையளிப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தனிடம் கையளிக்கப்பட்டது.

இம்மகஜரில் இந்து இளைஞர் மன்ற தலைவர் எம்.புவளகாந்தன், இந்து ஆலயங்கள் ஒண்றிய செயலாளர் எஸ்.புஸ்பலிங்கம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக் கிளையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எஸ்.சுதர்சனன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .