2026 மே 09, சனிக்கிழமை

dd

பிரதேச மூலவளத்திரட்டு தயாரிப்பதற்கான மென்பொருள் பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 21 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கிழக்கு மாகாணசபை மாகாணத்திட்டமிடல் செயலகத்தால் வடிவமைக்கப்பட்ட பிரதேச மூலவளத்திரட்டு தயாரிப்பதற்கான மென்பொருள் பயிற்சிநெறிகள் நேற்று வியாழக்கிழமை  நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்திலும்;  கணினிக் கூடத்திலும் நடைபெற்ற இப்பயிற்சிநெறிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலுமிருந்து பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலகங்களின் தலா 2 உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிநெறியில், மாகாண திட்டமிடல் செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் எஸ்.தயாரூபன் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.

பிரதேச மூலவளத்திரட்டு தயாரிப்பதற்கான மென்பொருள் தொடர்பான அறிக நிகழ்வு கடந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இப்பயிற்சிநெறி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .