2026 மே 09, சனிக்கிழமை

'ஈஸ்ட் லகூன்' அமைச்சர் பசிலினால் திறப்பு

Kogilavani   / 2013 ஜூன் 22 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு சின்ன உப்போடையில் 35 கோடி ரூபா செலிவல் நிர்மாணிக்கப்பட்டுள்ள 'ஈஸ்ட் லகூன்' எனும் நட்சத்திர ஹோட்டல் இன்று சனிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

ஹோட்டல் உரியைமாளரும் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் பெற்றி இன் பிறைவட் லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளருமான எம்.செல்வராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதியின் ஆலோசகரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான அருண் தம்பிமுத்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய முதலீட்டுச்சபை மற்றும் சுற்றுலா சபை என்பவற்றின் அனுமதியுடன் சகல வசதிகளுடையதாக இந்த நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் 45 அறைகள் உள்ளன.

நீச்சல் தடாகம், திருமண மண்டபம் என்பவற்றுடன் புதிய தொழிநுட்பங்களுடனான உள்ளக கூட்டமண்டம் என்பவைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .