2026 மே 09, சனிக்கிழமை

dd

பஸ் சாரதிக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஜூன் 27 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பஸ்ஸின் சாரதி காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .