2026 மே 09, சனிக்கிழமை

dd

திருமணங்களை சட்டரீதியாக பதிவு செய்ய நடவடிக்கை

Super User   / 2013 ஜூன் 28 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்யாதவர்களுக்கு சட்டரீதியான திருமணப் பதிவை மேற்கொள்ள சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட செயலாரின் வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் பிரதேச செயலக பிரிவுக்குள் சட்டரீதியாக திருமண பதிவினை மேற்கொள்ளாதவர்களின் விபரங்கள் அந்தந்த கிராமங்களில் கட்மையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் திரட்டப்பட்டு வருகின்றன.

திருமணம் முடித்தமைக்கான ஏதாவது ஆவணங்களுடன் குடும்பமாக வாழந்து கொண்ருக்கும் சட்டரீதியாக திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் கிராம உத்தியோகத்தரிடமோ அல்லது சமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமோ பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பிரதேசங்களில் திருணம் முடிந்து சட்டரீதியாக திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் பள்ளிவாசலின் பதிவுகள மற்றும் ஏனைய ஆவணங்கள் இருப்பின் அவைகளை கொண்டு சென்று பதிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவித்தல்கள் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பள்ளிவாயல்களின் ஒலி பெருக்கிகளில் காத்தான்குடி பிரதேச செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .