2026 மே 09, சனிக்கிழமை

கமநல அமைப்புக்களின் ஆளுமை விருத்திக்கான பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2013 ஜூன் 28 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்ட, பிரதேச, கிராமிய கமநல அமைப்புக்களின் ஆளுமை விருத்திக்கான பயிற்சிப் பட்டறை நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.

இலங்கை வர்த்தக கைத்தொழில் சம்மேளனங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறையில், மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

விவசாயிகளின் ஆளுமையினை விருத்தி செய்யும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஒக்ஸ்பார்ம் நிறுவனங்களின் அனுசரணையில் நடைபெற்ற இப் பயிற்சிப்பட்டறையில், அமைப்பின் கட்டுக்கோப்பை ஒழுங்கு படுத்தல், இயற்கை அனர்த்தங்களும் தீர்வுகளும், வங்கி தொடர்பான செயற்பாடுகள், சேதனப் பசளை முகாமைத்துவம், வாழ்வெழுச்சித் திட்டம், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இப் பயிற்சிப் பட்டறையின் போது விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அதேநேரம், மாவட்ட அரசாங்க அதிபரிடம், விவசாயிகளும், அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களது விவசாய நடவடிக்கையின் ஆரம்பம் முதல் அறுவடை வரையான பிரச்சினைகளையும் குறைகளையும் கூறி நேரடியாகவே தீர்வுகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டனர்.

இப்பயிற்சிப்பட்டறையில், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், இலங்கை வர்த்தக கைத்தொழில் சம்மேளனங்களின் ஒன்றியத்தின் மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ.வசீகராஜ், திட்ட உத்தியோகத்தர் ஜுலியன் குரூஸ், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக் கைத்தொழில் விசாயச் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.ரஞ்சிதமூர்த்தி, முகாமையாளர் கே.குகதாசன், இலங்கை வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .