2026 மே 09, சனிக்கிழமை

dd

ஆட்சேர்ப்பு திட்டம் தயாரிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 28 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

20 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் கடமைபுரியும் வரைவிட்ட சேவையைச் சேர்ந்தவர்களுக்கான ஆட்சேர்ப்பு திட்டம் தயாரிக்பட்டுள்ளது.

இதற்கான அங்கீகாரத்தை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் வழங்கியதாக வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆட்சேர்ப்பு திட்டம் தயாரிக்காமல் பிரதேசபை, நகரசபை, மாநகர சபைகளில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதை கண்டித்து இம்மாதம் 3ஆம் திகதி மேற்படி சங்கத்தினர் மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்மொன்றினை நடத்தியிருந்தனர்.

அதற்கமைய கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுதலின்பேரில் மாகாண பிதரம செயலாளர், மாகாண உள்ளுளூராட்சி ஆணையாளர் அடங்கலான உயர்மட்ட குழுவினருடன் வடக்கு கிழக்கு மாகாண அசர உத்தியோகத்தர் சங்கம் திருமலை உள்ளூராட்சி ஆணையாளர் பணிமனையில் பேச்சு வார்த்தை நடத்தியது.

இக்குழுவில் சங்கத்தின் சாhப்பாக சங்கத்தின் செயலாளர் இ.மணிவண்ணன், மட்டக்களப்பு மாவட்;ட செயலாளர் என்.ஜீவரெட்னம், சங்கத்தின் ஆலோசகர் எம்.தர்மகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தையின்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.ஜீவரட்னம் தெரிவித்தார்.

20 வருடங்களாக செய்யப்படாதிருந்த குறித்த விடயத்தை செய்த உள்ளூராட்சி ஆணையாளர் மாணிக்கம் உயகுமாருக்கு வடக்கு கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து மகஜர் ஒன்றினை அனுப்பியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .