2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

மோப்ப நாய்களின் உதவியுடன் ஏறாவூரில் சோதனை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் கஞ்சா வைத்திருக்கும் இடங்களை கண்டுபிடிக்கும் முகமாக மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடவடிக்கையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பொலிஸார் ஈடுபட்டனர்.

மேலும், மட்டக்களப்பு போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஏறாவூரின் மிச் நகர் கிராமத்திலுள்ள வீடொன்றிலும் தைக்கா வீதியிலுள்ள வீடொன்றிலும் இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும்; இங்கிருந்து கஞ்சாவோ அல்லது வேறேதும் போதைப்பொருட்களோ கைப்பற்றப்படவில்லையெனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில்,  மோப்ப நாய்களைக் கொண்டு ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சட்டவிரோதமாக பெற்றோல் விற்கப்பட்டு வந்த இடத்தையும் பெற்றோலையும் கண்டுபிடித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .