2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

கல்லடியில் புதிய பாலர் பாடசாலை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்லடியில் பாலர் பாடசாலையொன்று நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி.ரி.ஆர்.டி.சில்வா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாலர் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், பிரிகேடியர் மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இப்பாலர் பாடசாலை திறந்து வைக்கப்பட்ட முதல் நாளே சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .