2025 மே 05, திங்கட்கிழமை

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு உதவி

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கும் விதவைகளுக்கும் சுயதொழிலுக்கான ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்படவிருப்பதாக ஏறாவூர் நகர பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.எம்.மபாஹிறா தெரிவித்தார்.

இந்த உதவித் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்களும், மாவரைக்கும் இயந்திரங்களும், ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்புக்கான உதவிகளும் வழங்கப்படவிருக்கின்றன.

ஒரு குடும்பத்திற்கு தலா 20 ஆயிரம் ரூபா பெறுமதியான இந்த உதவித் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் உதவி பெறும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இந்த உதவித் திட்டங்கள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினூடாக வழங்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X