2025 மே 05, திங்கட்கிழமை

யானை தாக்கியதில் குழந்தை உட்பட மூவர் படுகாயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 06 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி, மற்றும் சந்திவெளிப் பகுதிகளில் காட்டுயானை தாக்கியதில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

காட்டு யானைகள் நேற்றும் இன்றுமே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

சித்தாண்டிக் கிராமத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை மாலை  காட்டு யானைகள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டதில் குழந்தை உட்பட மேலும் இருவர் படுகாயமடைந்தார்.

சித்தாண்டி உதயன் மூலையைச் சேர்ந்த எஸ். இனார்த்தன் (வயது 04) மற்றும்  சித்தாண்டி பிரதான வீதியைச் சேர்ந்த ஏ. ஆசீர்வாதம் (வயது 42) ஆகிய இருவரே இன்றுமாலை காயமடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மாவெடிவெம்பு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சித்தாண்டிக்கு அடுத்ததாக உள்ள சந்திவெளிக் கிராமத்தில் நேற்று மாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான கே. நகுலேந்திரன் (வயது-30) காயங்களுக்குள்ளான நிலையில் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பின்னர் அவர் மாற்றப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X