2025 மே 05, திங்கட்கிழமை

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்


இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றது.

கொழும்பில் உள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தகவல் நிலையத்தின் அனுசரணையுடன் இது தொடர்பான நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் எல்.எம்.எம்.என்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போதைப்பொருள் ஒழிப்பு தகவல் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்களான ஜே.கலாராணி, ஆலிதீன் ஹமீர், மாவட்ட சம்மேளனப் பிரதிநிதிகள், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்தும் 50இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் போதைப்பொருள் பாவனையை குறைத்து சமூக மட்டத்தில் சிறந்த சமூகத்தினை ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்த அறிவுறுத்தல்கள் கிராமிய மட்டத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தினை உருவாக்கும் நோக்குடன் இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X