2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன், ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குருக்கள்மடம் செல்லக்கதிர்காமர் ஆலயத்திலும் மாங்காடு பிள்ளையார் ஆலயத்திலும் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி  களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குருக்கள்மடம் செல்லக்கதிர்காமர் ஆலயமும் மாங்காடு பிள்ளையார் ஆலயமும் உடைக்கப்பட்டு மேற்படி ஆலயங்களிலிருந்த தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இதன்போது மேற்படி சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் தங்கநகைகளையும் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் கிளிநொச்சியையும்  ஒருவர் யாழ்ப்பாணத்தையும் ஒருவர் வவுனியாவையும் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .