2025 மே 05, திங்கட்கிழமை

பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் சீனா விஜயம்

Super User   / 2013 செப்டெம்பர் 08 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதய ஸ்ரீதர் இன்று ஞாயிற்றுக்கிழமை சீனா பயணமாகியுள்ளார்.

சீனாவில் இடம்பெறும் வாழ்வாதார சமூக அபிவிருத்தி பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இவரைத் தெரிவுசெய்துள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில்  ஒரு மாத காலத்திற்கு இந்தப் பயிற்சி செயலமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதேச செயலாளர் உருத்திரன் உதய ஸ்ரீதரின் வெளிநாட்டு விஜயத்தினால் ஒக்டோபர் எட்டாம் திகதி வரை ஏறாவூர்ப்பற்று பதில் பிரதேச செயலாளராக நவரூபரஞ்சனி முகுந்தன் கடமையாற்றுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X