2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் களனிப் பல்கலை பட்டதாரிகளின் ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


களனிப் பல்கலைக்கழகத்தினுடைய தமிழ்மொழிமூல பட்டதாரிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு 30 வருடங்களின்  பின்னர் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.

'களனியின் வசந்தம்;' எனும் மகுடத்தின் கீழ் 1973ஆம் ஆண்டு தொடக்கம் 1977ஆம் ஆண்டுவரை களனிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலம் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் ஒன்றுகூடலே நடைபெற்றது.

களனிப் பல்கலைக்கழகத்தில் 1973ஆம் ஆண்டு தொடக்கம் 1977ஆம் ஆண்டுவரை தமிழ்மொழி மூலம் பட்டம் பெற்றவர்களுக்கிடையில் தேசிய ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதே இந்த ஒன்றுகூடலின் நோக்கம் என இந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளருமான பொன். செல்வநாயகம் தெரிவித்தார்.

இந்த ஒன்றுகூடலின் விசேட உரையினை மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா நிகழ்த்தினார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி மூல பட்டதாரியும் இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வில்; இந்தப் பல்கலைக்கழக பட்டதாரியும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளருமான பொன். செல்வநாயகம்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி, மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் 120 பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X