2025 மே 05, திங்கட்கிழமை

வயலிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், தேவ அச்சுதன்,எஸ்.ரவீந்திரன், 
மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 38ஆம் கொலனியில் உள்ள நவகிரி நகர் வயல்வெளியிலிருந்து  ஆயுதங்கள் சிலவற்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ரீ - 56 ரக துப்பாக்கிகள் 2, ரீ - 56 ரக துப்பாக்கிகளுக்கான மகஸின்கள் 4, தோட்டாக்கள் 200,  ஒரு கைக்குண்டு ஆகியவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் வசித்துவருகின்ற  விவசாயி ஒருவருக்குச் சொந்தமான வயலிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

நவகிரி நகரில் உள்ள தனது வயலை பெரும்போகச் செய்கைக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உழுதுகொண்டிருந்தபோது, இந்த ஆயுதங்கள் வெளிப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் குறித்த விவசாயி  தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வயல்வெளிக்குச் சென்ற களுவாஞ்சிக்குடி பொலிஸார், இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (படங்கள்: எஸ்.ரவீந்திரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X