2025 மே 05, திங்கட்கிழமை

தாய், சேய் சுகாதார சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் புனரமைக்கப்பட்ட தாய், சேய் சுகாதார சிகிச்சை நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

புதிய காத்தான்குடி பதுறியா பகுதிக்கான தாய், சேய் சுகாதார சிகிச்சை நிலையக் கட்டிடம் கடந்த 2006ஆம் ஆண்டு இனந்தெரியாதோரினால்  சேதமாக்கப்பட்டிருந்தது.

2006ஆம் ஆண்டு இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட மறுதினமே இனந்தெரியாதோரினால்  தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  புனரமைக்கப்பட்ட இந்;த தாய், சேய் சுகாதார சிகிச்சை நிலையத்தை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்.

'தேசத்திற்கு மகுடம்' திட்டத்தின் கீழ் 42 இலட்சம் ரூபா செலவில் இந்த சுகாதார நிலையக் கட்டிடம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி, சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X