2025 மே 05, திங்கட்கிழமை

கிழக்கில் ஆட்பதிவுத் திணைக்கள பிராந்திய அலுவலகம் திறப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன் எம்.எஸ்எம். நூர்தீன்


ஆட்பதிவுத் திணைக்களத்தின் மற்றுமொறு பிராந்திய அலுவலகம் கிழக்கு மாகாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்த அலுவகத்தின் ஊடாக கிழக்கு மாகாண மக்கள் நன்மையடைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பி;.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் மல்காந்தி ரத்நாயக்கா, பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர் எம். எஸ். சரத்குமார மற்றும் ஆட்பதிவு  திணைக்கள தகவல் தொழல்நுட்ப மற்றும் இயக்க ஆணையாளர் எஸ்.ஏல்.நசீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பிராந்திய அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு இரண்டு வார காலத்தில் அடையாள அட்டைகளை பெற முடியும்; என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகமொன்று அண்மையில் வவுனியாவில் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X