2025 மே 05, திங்கட்கிழமை

பொலிஸாருக்கு முழந்தாள் தண்டனை; விசாரிக்க விசேட குழு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்களை அரைமணித்தியாலம் முழந்தாளிட வைத்து தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.

அந்த விசேட குழு காத்தான்குடிக்கு சென்று தனது விசாரணைகளை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டுள்ளது.

பொலிஸ் சார்ஜன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து அந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்கள் முழந்தாளிட வைக்கப்பட்டு  தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழந்தாளிட்டு தண்டனையை அனுபவித்ததாக கூறப்படும் 120 சார்ஜன்களிடமும் இந்த விசேட குழு வாக்கு மூலங்களை  பெற்றுக்கொள்ள விருக்கின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலஞ்சம் பெறுவது சட்டத்தின் பிரகாரம் குற்றம் எனவும் அதனால் ஏற்படபோகின்ற பின்விளைவுகள் குறித்து பொலிஸ் சார்ஜன்களுக்கு தெளிவுபடுத்தியதாக கூறிய கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர முழந்தாளிடவைக்கவோ இன்றேல் தண்டனை வழங்கவோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X