2025 மே 05, திங்கட்கிழமை

இந்து மக்களின் உரிமை மீறல்கள் குறித்து கலந்துரையாடலுக்கு அழைப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 10 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

இந்து மக்களின் உரிமை மீறல்கள் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமூகத் தலைவர்கள் உடனான சந்திப்பொன்றுக்கே விஸ்வ ஹிந்து பரிசத்தின் கிழக்குப் பிராந்திய பிரதிநிதியாகிய வருண் கமலதாஸே மேற்கண்டவாறு அழைப்பு  விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண இந்து ஆலயங்கள், மக்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள், காணி உரிமங்கள், கலாச்சார சீரழிவுகள் ஆகியவற்றின் மூல காரணங்களை பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் இணைந்து கொள்ள விருப்பமான இந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச் சந்திப்பு எதிர்வரும் 15 ஆம்த திகதி காலை நடைபெறவுள்ளதனால் அதற்கு முன்னர் தன்னுடன் தொடர்பு கொண்டு இப் பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான விடயங்கள் குறித்து மேலதிக விபரங்களை பெற்றுகொள்ளும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் நில ஆக்கிரமிப்பு, ஆலயங்களின் உடைப்பு, இந்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கலாசாரப் பிறழ்வுகள்சார் பிரச்சினைகள் தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களது பிரதேசம், மற்றும் சமூகம் சார்ந்துவிடயங்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டுதல், பிரச்சினைளுக்கான காரணங்கள் தொடர்பில் கருத்தொருமிப்பு எய்துதல் காலத்தின் தேவையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இந்து ஆலயங்களின் பிரதிநிதிகள் உடனடியாக ஒன்றிணைய வேண்டிய தேவை எழுந்துள்ளது எனவும் அனைத்து கிழக்கு மாகாண இந்து ஆலயங்களின், நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் மேலதிக தகவல்கள் தேவைப்படின் 0777679596 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X