2025 மே 05, திங்கட்கிழமை

'அரச ஊழியர்கள் அன்றையதின வேலையை அன்றையதினமே செய்து முடிக்கப் பழக வேண்டும்'

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

தங்களது தேவை கருதி அரசாங்கத் திணைக்களங்களில் கடமையாற்றும் ஊழியர்களை பொதுமக்கள்  நாடிவரும்போது இன்று போய், நாளை வா என்று கூறாமல் மஹிந்த சிந்தனைக்கு அமைய அன்றையதின வேலையை அன்றையதினமே செய்து முடிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியக் கிளை மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இந்தக் கிளையானது ஆட்பதிவுத் திணைக்களத்தின் வலையமைப்பிற்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் பயனாளிகள் ஒருவார காலத்தினுள் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

இவ்வளவு காலமும் கொழும்பில் உள்ள திணைக்களத்திற்கு சென்றோ அல்லது தபால் மூலமோ தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான ஆவணங்களை திணைக்களத்திற்கு அனுப்பும்போது, அதில் குறைபாடுகள் இருப்பின் அதை நிவர்த்தி செய்வதற்காக  சம்பந்தப்பட்டவர்களுக்கு தபால் மூலம் திணைக்களம் அறிவிக்கும்போது காலதாமதம் ஏற்பட்டது. ஆனால், இனிமேல் இந்தப் பிரச்சினை இருக்காது எனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X