2025 மே 05, திங்கட்கிழமை

காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவு

Super User   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்

இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள்; இன்று  காலை ஆரம்பித்த  வேலைநிறுத்தம் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது என காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.

மூன்று மாதச் சம்பள நிலுவையை வழங்குமாறு கோரி இரண்டாவது தடவையாக எங்களுடைய பஸ் டிப்போ ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டமே முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட முகாமையாளர் ஏ.எம்.நஸீர் தலைமையில் காத்தான்குடி பஸ் டிப்போவில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ரணசிங்க மற்றும் கோயில்குளம் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி சமன் பெரேரா, மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் ரவூப் ஏ மஜீட், காத்தான்குடி பஸ் டிப்போ முகாமையாளர் எம்.றஹீம், என பலர் கலந்துகொண்ட உயர்மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு மாதச் சம்பள நிலுவை ஏதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை காரியாலயம் மூலம் பெற்றுத்தருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் தெரிவித்தார்.

இதையடுத்து குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததோடு ஸ்தம்மிதம் அடைந்த காத்தான்குடி பஸ் டிப்போவின் போக்குவரத்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X