2025 மே 05, திங்கட்கிழமை

'யுத்தம் காரணமாக விரிவுரையாளர்கள் ஆராய்ச்சிகளை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை'

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த முப்பது வருட கால யுத்தம்  காரணமாக சர்வதேச ரீதியில் தமது பல்கலைக்கழக  விரிவுரையாளர்கள் ஆராய்ச்சிகளை செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை என கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தெரிவித்தார்.

'யுத்தத்துக்குப் பின்னரான மீள்ச்சியில் அறிவியலும் தொழில்நுட்பமும்' எனும் தலைப்பில் கிழக்குப் பல்கலைக்ககழத்தின் இரண்டாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு நேற்று வியாழக்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகியது. இதில் தலைமையுரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பொறுத்தவரையில் கற்பித்தலும் ஆராய்ச்சிகளை செய்வதும் அவர்களின் கடமையாகும். அந்த வகையில் இந்த சர்வதேச ஆராய்ச்சி மாநாடு நமது பல்கலைக்கழக  விரிவுரையாளர்களை ஆராய்ச்சிகளை செய்வதற்கு ஊக்கத்தை அளிப்பதுடன் எதிர்கால சமூகம் சார்ந்த பயன்படக்கூடிய ஆராய்ச்சிகளை செய்வதற்கும் சிறந்ததொரு  வாய்ப்பாக அமையும் என நினைக்கின்றேன்.

கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக  சர்வதேச ரீதியில் நமது பல்கலைக்கழக  விரிவுரையாளர்கள் ஆராய்ச்சிகளை செய்வதற்கு  சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது நமது நாட்டில் நிலவும் சமாதான சூழ்நிலையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதுடன் ஆராய்ச்சிகள் நமது சமூகத்திற்கும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பெரும் பங்களிப்பு செய்யும் என்ற நம்பிக்கை உண்டு.

அந்த வகையில் இந்த சர்வதேச மாநாடு நமது கிழக்கு பல்கலைக்கழகத்தை  உலகத்திற்கு கொண்டு செல்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த சர்வதேச மாநாட்டில் பொறுப்பேற்றுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் யுத்தத்தின் பின்னரான இந்தக் கால கட்டத்தில் நமது மீள்கட்டமைப்புக்கு பெரிதும் பங்களிப்புச் செய்யும்.

எதிர்கலாத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் செய்யும் ஆராய்ச்சிகள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன் பெற்றுக்கொடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துவதென்பது இலகுவான காரியமில்லை. எனினும் இந்த சர்வதேச மாநாட்டை இங்கு நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்ட அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறுகின்றேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X