2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'அனர்த்தங்களின்போது சுகாதாரம், முதலுதவியை கையாள்வது' தொடர்பான பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வ.சக்திவேல் சக்திவேல்


'அனர்த்தங்களின்போது  சுகாதாரத்தையும்  முதலுதவியையும் எவ்வாறு கையாள்வது' என்னும் தொனிப்பொருளின் கீழ் பயிற்சிநெறி ஒன்று வவுணதீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்டப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சிநெறியில், வருடம் தோறும் மழைக் காலங்களில் வெள்ள அனர்த்தங்களுக்கு உள்ளாகும் வவுணதீவுப் பிரதேசத்தின் கிராமங்களிலுள்ள அனர்த்த முகாமைத்துவக் கிராமமட்டக் குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது அனர்த்தம்  ஏற்படும் வேளையில்; எவ்வாறு சுகாதாரத்தை மேற்கொள்ளவது என்பதுடன்,  முதலுதவிச் செயற்பாடுகளிலும் எவ்வாறு ஈடுபடுவது என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்டப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜாவின்; தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில்  வவுணதீவு பிரதேச செயலாளர் வெ.தவராஜா, அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட உதவியாளர் த.துஷியந்தன், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .