2025 மே 03, சனிக்கிழமை

வயல்களிலிருந்து மாடுகள் வெளியேற்றப்படாமையால் பாதிப்பு: விவசாயிகள்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக விவசாயச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட நிலங்களிலிருந்து மாடுகள் வெளியேற்றப்படாமையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வவுணதீவுப் பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்களிலிருந்து மாடுகள் வெளியேற்றப்படாமையால் வயல்; வரம்புகள் சேதமடைவதுடன்,  நெற்பயிர்களையும்  மாடுகள் அழிப்பதாக  உத்தியோகஸ்தர்கள், விவசாய அமைப்புக்களிடம்; முறையிட்டுள்ளதாகவும் அது பலனளிக்கவில்லை எனவும்  விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வவுணதீவுப்  பிரதேச பெரும்போக விவசாயச் செய்கை தொடர்பான ஆரம்பக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து வயல் வேலை ஆரம்பிக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.  மேலும் இந்தத் தினத்துக்கு முன்னர் மாடுகளை விவசாயச் செய்கை பண்ணப்படும் நிலங்களிலிருந்து மேச்சலுக்காக வெளியேற்ற வேண்டும் என்பதுடன்,  ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி விதைப்பு ஆரம்பித்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் முடிவடைய வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இதுவரையில் மாடுகள் வெளியேற்றப்படாமையால் வயல் நிலங்கள் சேதமடைவதுடன், நெற்பயிர்கள் அழிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் விவசாய அமைப்புத் தலைவர்கள், கிராம அலுவலகர் போன்றோரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, பண்ணையாளர்கள் சட்டத்தை மதிக்காமல் செயற்படுவதனால் குறித்த விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X